மாற்று இடம் கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்!!

மாற்று இடம் கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்!!

திருச்சி செம்பட்டு பகுதியில் எம்.கே.டி காலனி உள்ளது. இங்கு தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 55 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அனைவரும் தோல் பதனிடும் தொழிலாளர்கள். இங்கு கடந்த எண்பது ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர், அவர்கள் இடத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


 இந்நிலையில் எங்களுக்கு அதே பகுதியில் உள்ள அரசு இடத்தில் மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரி அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் கவுன்சிலர் காளீஸ்வரன் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


 
இதில் விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியை சந்தித்து மாற்று இடம் கேட்டு மனு கொடுத்தனர், அவர்கள்  அதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.