தை அமாவாசை – அம்மா மண்டபத்தில் மூதாதையருக்கு திதி கொடுத்து வழிபாடு
தை அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை தினத்தன்று தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். தை அமாவாசையன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.
இதனால் முன்னோர்களின் ஆசிர்வாதம் என்றும் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி தைஅமாவாசை தினமான இன்று திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில், கங்கையின் புனிதமாக கருதப்படும்ளூ புனிதகாவிரிஆற்றில் நீராடி பின்னர்தங்களது மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர்.
இதில் திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவழிபாடு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து காவிரி தாயாரையும் பின்னர் ஸ்ரீரங்கம், திருவாணைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தனர்.
இதேபோன்று அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள படித்துறைகளில் பொதுமக்கள் புனிதநீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பு வசதிக்காக பலத்த போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn