மழை நீர் தேங்கியுள்ள இடங்களை அமைச்சர் நேரில் ஆய்வு.
திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பொன்நகர், கருமண்டபம் குளத்துக்கரை, பிராட்டியூர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு உடனடியாக மழை நீரை வெளியேற்றிட மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
திருச்சி கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை நகராட்சி நிருவாகத்துறை கே.என்.நேரு அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேசிய கல்லூரி அருகில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகளையும், கருமண்டபம் குளத்துக்கரை, பிராட்டியூர், காவிரி நகர், கொல்லாங்குளம் ஏரி ஆகிய பகுதிகளை பார்வையிட்டார்.
குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழை நீரை ராட்சத மோட்டார் பம்புகளை வைத்து, மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அதனை பார்வையிட்ட அமைச்சர், அப்பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision