அண்ணன் தம்பி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தற்கொலை முயற்சி - பரபரப்பு

அண்ணன் தம்பி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தற்கொலை முயற்சி - பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கத்தி காரம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன்(41) மற்றும் அவருடைய அண்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென அமர்ந்து தற்கொலை செய்து கொள்வதாக கோஷமிட்டனர்.

Advertisement

அவர்களுடைய சித்தப்பா சின்னையா என்பவர் சொத்தை அபகரித்துக் கொண்டதாகவும், இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தங்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே தங்களுடைய சொத்தை மீட்டுத் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து தற்கொலை செய்து கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm