திருச்சி மாவட்டத்தில் ரூ 1.75 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

திருச்சி மாவட்டத்தில் ரூ 1.75 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை  அமைச்சர்கள் வழங்கினார்கள்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறையின் மூலம் ஐந்து , 108 அவசர ஊர்தி சேவை ரூபாய் 1.15 கோடி மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூபாய் 46.11 இலட்சம் மதிப்பீட்டிலும் , மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 64 வது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 15 வீரர் , வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கம் , வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்றதை பாராட்டி ரூபாய் 22.50 இலட்சம் ஊக்கத்தொகை காசோலையாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர்.வனிதா, இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் டாக்டர்.லெட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இராமகிருட்டினன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு, 108 அரவச ஊர்தி சேவை மண்டல மேலாளர் த.அறிவுக்கரசு,  மாவட்ட செயல் அலுவலர்கள் டி.கார்த்தி, எஸ்.அருள்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.