நிவர் புயலை எதிர்கொள்ள திருச்சி தீயணைப்புத்துறை தயார் 

நிவர் புயலை எதிர்கொள்ள திருச்சி தீயணைப்புத்துறை தயார் 

திருச்சி  தீயணைப்பு துறை
இயக்குனர் திரு.ஜாபர் சேட்  உத்தரவின்படி மத்திய மண்டல
துணை இயக்குனர்   மீனாட்சி விஜயகுமார் அவருடைய அறிவுரைப்படி  திருச்சி மண்டலத்தில் 9 மாவட்டத்தில் 95 தீயணைப்பு நிலையங்களில் சுமார் 1400 அலுவலர் மற்றும் பணியாளர்கள் இன்றைக்கு மாலை நேரத்தில் 
 இருந்து 26 ஆம் தேதி மறு உத்தரவு வரும் வரை எந்தவிதமான விடுப்பு கிடையாது.
 தொடர்ந்து மீட்பு பணியில்  ஈடுபட  வேண்டும்.

கஜா புயல் வந்து நமக்கு நிறைய  விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது.   இயற்கை நிகழ்வினை எதிர்கொள்ள தயாரான நிலையில் திருச்சியை பொறுத்தவரைக்கும்  மோட்டாருடன் கூடிய ரப்பர் படகுகள், இரண்டாவது வந்து தாழ்வான பகுதிகளில்  தேங்கும் நீரை  அகற்ற 
மிதவை பம்புகள் மூலம்
  தண்ணீரை  உறிஞ்சி வெளியில் கொண்டு வரவும், கூடுதலாக நீர்மூழ்கி மோட்டார் வந்திருக்கிறது .

 மின்கம்பங்களை அகற்ற   கட்டர்,  கம்பிகள் வெட்டக் கூடிய கருவிகளும்   கான்கிரீட் கட்டர், அயன் கட்டர், ஹைட்ராலிக் ஜாக்கி,ஏர் லிப்டிங் பேக்  உள்ளிட்ட உபகரணங்கள்  மீட்புப் பணிகளில் ஈடுபட தயாராக இருப்பதாக திருச்சி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மெல்கிராஜ் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm