"அடுத்த 2 மாதங்களில் கோவிட் தொற்று அதிகரிக்கும் என்ற எச்சரிக்கையால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" - ஆட்சியர் பேட்டி!!

"அடுத்த 2 மாதங்களில் கோவிட் தொற்று அதிகரிக்கும் என்ற எச்சரிக்கையால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" - ஆட்சியர் பேட்டி!!

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுவது வழக்கம். புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென் பட்டுப்புடவைகள் காஞ்சிபுரம், ஆரணி தஞ்சை போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு புடவைகள் கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் திருபுவனம் பட்டு சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

Advertisement

மேலும் படுக்கை விரிப்புகள் ,தலையணை உறைகள், பருத்தி சட்டைகள், மிதியடிகள் மற்றும் ஏற்றுமதி ரகங்களும் ஏராளமாக தருவிர்க்கப்பட்டுள்ளது இந்நிலையில் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சிவராசு குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார் .

பின்பு செய்தியாளரிடம் பேசிய அவர்

கடந்த ஆண்டு 2019 ல் 25 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 27.25 லட்சம் விற்பனை செய்யப்பட்டது .இந்த வருடம் 2020ல் 33 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். அடுத்த 2 மாதங்களில் கோவிட் தொற்று அதிகரிக்கும் என உலக நாடுகள் எச்சரித்துள்ளன. பொதுமக்கள் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தினார்.