கெட்ட வார்த்தைகளில் திட்டி, கொலை மிரட்டல் விடுக்கும் சூர்யா ஆடியோ வைரல்

Nov 23, 2022 - 00:37
 1011
கெட்ட வார்த்தைகளில் திட்டி, கொலை மிரட்டல் விடுக்கும் சூர்யா ஆடியோ வைரல்

திமுகவில் இருந்து விலகிய பாஜகவில் இணைந்தவர் திருச்சி சூர்யா. அவர் இணைந்த கையோடுஅவருக்கு, ஓபிசி அணி மாநிலச் செயலாளர் பதவியை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வழங்கி கௌரவித்தார். அதற்கேற்றாற்போல், சமூக வலைதளங்களில் மிகவும் 'ஆக்டிவ்' ஆக இருக்கும் சூர்யா, திமுக கட்சி, அதன் கொள்கைகள், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

நள்ளிரவு துவங்கி, அதிகாலை வரை சூரியாவின் செல்போன் அழைப்பை கண்டாலே அனைவரும் அலறுகின்றனர். ஒவ்வொரு முக்கிய நிர்வாகிகளுக்கும் போன் செய்து, "எனக்கு உங்கள் அணியில் உரிய மரியாதை கொடுப்பதில்லை" என்று ஆரம்பித்து, பின்னர் ஏக வசனத்தில் வசைபாடுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். வயதில் மிகவும் இளையவரான இவர், எந்த மூத்த நிர்வாகிக்கும் உரிய மரியாதை கொடுக்காமல் ஒருமையில் பேசுவதும், சிலரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவதும் சர்வ சாதாரணமாக உள்ளது.

இதுகுறித்து பலர், பலமுறை, மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் ஆடியோ ரிக்கார்டிங் உள்ளிட்ட ஆதாரபூர்வமான புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை யையும் அண்ணாமலை எடுக்கவில்லை என வேதனைப்படுகிறார்கள். இதனால், மேலும் 'உற்சாகமடைந்து' இவர் தினந்தோறும் நடத்தும் 'நள்ளிரவு கச்சேரியால்" பலர் கட்சியில் இருந்தே வெளியேறி விடலாமா? என்ற எண்ணத்தில் இருக்கின்றனராம்.

இந்நிலையில், பாஜக சிறுபான்மையினர் அணித்தலைவி டெய்சி தங்கையாவை, திருச்சி சூர்யா, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் சரமாரியாக திட்டுவதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுக்கின்ற ஆடியோ ஒன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளில் இருந்து, கட்சிக்கு வந்து செயல்படும் பல தொண்டர்களை கொண்ட கட்சி பாஜக. அதன் சிறுபான்மையினர் அணி பெண் நிர்வாகி ஒருவரிடம், தற்போது கட்சியில் இணைந்த சூர்யா தரக்குறைவாக பேசிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO