மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை
சென்னை மடுவங்கரையை சேர்ந்த விரிவாக்க கல்வியாளராக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன் 2002 ஆம் ஆண்டு பணியிலிருந்தபோது உயிரிழந்தார். அவரது வாரிசுக்கான வேலையாக அவரது மகன் சுவாதிபிரகாஷ்(39) கடந்த 2018-ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக பணியினை தொடங்கியுள்ளார். மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டம் தாதனூர் கிராமத்தில் பணியாற்றி வந்த சுவாதிபிரகாஷிற்கு, திருமணமாகி அஸ்வினி (34) என்ற மனைவியும், 8 வயதில் மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சனையில் மனைவி, குழந்தையை விட்டு பிரிந்து தனது தாயுடன் மணப்பாறை பாரதியார் நகர் பகுதியில் சுவாதிபிரகாஷ் வசித்து வந்துள்ளார்.
சுவாதிபிரகாஷ் வீட்டில் தனியாக இருந்த நிலையில் காலை வெகுநேரமாக வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் சுவாதிபிரகாஷ் இருந்துள்ளார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல் உதவி ஆய்வாளார் செல்வராஜ் தலைமையிலான போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று சுவாதிபிரகாஷ் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுவாதிபிரகாஷ் தூக்கில் தொங்கிய அறையில் தொலைக்காட்சி பெட்டி இயக்கத்திலேயே இருந்தது. மேலும் அருகே சோபாவில் சுவாதிபிரகாஷ் எழுதி வைத்திருந்த 3 பக்க கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர்.
அதில், தனக்கு சிறுவயதிலிருந்தே ஸ்கிசோஃப்ரினியா என்ற மன நோய் இருந்ததாகவும், அதற்கு சென்னையில் மருத்துவம் பார்த்து வந்ததாகவும் பின்னர் வளநாடு பகுதியில் வேலை கிடைத்ததால் சிகிக்சை தொடராமல் மன அழுத்ததில் இருந்து வந்ததால் குடிப்பழத்திற்கு ஆளாகி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், என்னால் இனிமேல் வாழ முடியாது என்றும் தனது இறப்பிற்கு எதிர்மறை எண்ணங்களே காரணம் என்றும் எழுதி வைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO