கட்டணமில்லா ஆன்மிக பயணம் - பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்
அம்மன் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு ஆன்மிக பயணம் செல்வதற்கு தேர்வு செய்து அனுமதிக்கப்படுவர்
1. ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
2. அம்மன் திருக்கோயில்கள் ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவராகவும், 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
3. வயது சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
4. அம்மன் திருக்கோயில்கள் ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்களுக்கு போதிய உடல் தகுதி இருத்தல் வேண்டும்.
5. அம்மன் திருக்கோயில்கள் ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரி க்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.
6. அம்மன் திருக்கோயில்கள் ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் தங்களுடன் சிறு குழந்தைகள் அழைத்து வர அனுமதி இல்லை.
7. ஆதார் கார்டு அல்லது நிரந்தரக் கணக்கு எண் (Pan card) நகல் இணைக்கப்பட வேண்டும்.
8. விண்ணப்பங்கள் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். பெற்றுக் கொண்ட விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
9. மேலும் விண்ணப்பங்கள் இத்துறை வலைத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து (www.hrce.tn.gov.in).
10. ஆன்மிக பயணம் செல்லும் பக்தரின் ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அதற்கான வருமான சான்று உரிய வருவாய்த்துறை அலுவலரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும்.
11. பக்தர்கள் ஒரு முறை மட்டுமே இப்பயணத்தில் கலந்து கொள்ள முடியும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision