திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு

திருச்சி மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில், துணை மேயர் திவ்யா, ஆணையர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் கூறுகையில்..... மாநகராட்சி பகுதியில் வசூலிக்கப்படும் குப்பை வரி (எஸ்யூசி) முன்பு உள்ளதை விட 10 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

இதனால் பெட்டிக்கடை உள்ளிட்ட சாதாரண கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த மாநகராட்சி மேயர்.... இந்த வரி விதிப்பு தொடர்பாக மீண்டும் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனை தொடர்ந்து 65 வது கவுன்சிலர்களும் தங்கள் வார்டு குறைகளை தெரிவித்தனர். பிறகு பல தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர்கள் எஸ்.நாராயணன், செல்வ பாலாஜி, நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன், துர்கா தேவி, பு.ஜெய நிர்மலா திருமதி. விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision