ஊரடங்கு மீறி வெளியே சுற்றிய 250 பேர் மீது வழக்குப்பதிவு 

ஊரடங்கு மீறி வெளியே சுற்றிய 250 பேர் மீது வழக்குப்பதிவு 

தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியதாக 250 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து இதுபோன்று போலீசாரின் எச்சரிக்கையை மீறி வெளியே சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu