மக்கள் சக்தி இயக்க சார்பில் உலக பூமி தினம் கொண்டாட்டம்

மக்கள் சக்தி இயக்க சார்பில் உலக பூமி தினம் கொண்டாட்டம்

பூமி நாள் (Earth Day)  என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாளாகும். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை 

உலக பூமி தின நாளின் போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது. பூமி நாளில் பொது மக்களிடையே அனைவரும் சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மரங்கள் அழிப்பால் நிழற்பாங்கு குறைதல், மண் அரிப்பு ஏற்படுதல், வெள்ளப்பெருக்கு, வெப்ப மூட்டம் அதிகரித்தல், மழைப்பொழிவு குறைதல், நீர் தக்கவைப்பு குறைதல், வறட்சி ஏற்படுகிறது அது மட்டுமல்ல மரங்களை சார்ந்து வாழும் புழு, பூச்சி, பறவைகள், விலங்குகள் இன்று இடம் பெயர்ந்தும் காணாமல் போய்விடுகின்றன. ஒருவர் ஒரு மரம் வளர்த்தால் மனித சமூகம் வளரும். 

சமுதாயம் வளரும். வரும் சந்ததியினருக்கு பசுமையான சூழலை கொடுக்கலாம். மனித சமுதாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும், சேவை செய்யும் மனப்பான்மையுடன் நமது தேவைக்காக மரம் நட்டு வளர்ப்போம் என்கிற வரணும், சுற்றுச்சூழல் மேம்பாடு மாசுபாட்டினை குறைத்திட பறவை இனங்களுக்கு புகலிடம் அளித்திட, மண்ணில்  ‌‌ஈப்பதத்தையும் வளத்தையும் தக்க வைத்திட, மண் அரிப்பை தடுத்திட, மழைப்பொழிவு ஏற்பட்டிட, காடு வளம் வேண்டி மரம் வேண்டும்.

திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் தலைமையில் உலக பூமி தின விழிப்புணர்வு நிகழ்வில் நடந்தது. மரம் வளர்த்து, புவியை காப்போம், புவி வெப்பத்தை தடுப்போம் என  மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மக்களுக்கு மரக்கன்று வழங்கியும், பதாகை ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu