ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிகள் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிகள் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை,

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி போன்ற பயிற்சி நிலையங்களில் Chiron Skill Program Development Ptd, நிறுவனத்தின் மூலமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் / பழங்குடியின சார்ந்தவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் மற்றும் NA அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வீட்டு வேலை செய்பவர் (பொது), 5-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 6 மாதம் வேலை முன் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு உதவி குழாய் பழுது பார்ப்பவர் (பொது), 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இலரக மோட்டார் வாகன ஓட்டுநர்ராகவும் மற்றும் நான்கு சக்கர வாகன சேவை உதவியாளராகவும்,

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வார்டுபாய் ஆண் மற்றும் பெண் உதவியாளர்ராகவும், 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி அழைப்பு மையத்தில் (6 முதல் 12 மாதம் வரை) வேலை முன் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் நிராயுதபாணி காவலர் போன்ற பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

18 முதல் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 10 முதல் 14 நாட்கள் ஆகும். மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்படும். 

இந்நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் வழங்கப்படும். மேலும், இப்பயிற்சியினை பெற்றவர்கள் (SIM Hospital - Chennai, SRM Global Hospital- Chengalpattu, PADMAM Restaurant - Chennai, RAMADA Plaza – Chennai, SRM Hotel – Chengalpattu, SRM Hotel - Chengalpatu, PADMAM Resturant - Chennai, RAMADA Plaza – Chennai, SRM Groups Of Colleges Chennai & Chengalpattu, SRM Hotel – Trichy, SRM Transport –Chennai, SRM Medical College – Trichy) போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தாட்கோ மூலம் உதவி தொகையாக ரூ.375/- பயிற்சி நாட்களில் வழங்கப்படும்.

இப்பயிற்சி பெறுவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யவும். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட தாட்கோவால் மேற்கொள்ளப்படும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச்சாலை, திருச்சிராப்பள்ளி-620001 (0431-2463969) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn