மேயர், காவல் ஆணையர் அலுவலகத்தில் "மௌன அஞ்சலி"

மேயர், காவல் ஆணையர் அலுவலகத்தில் "மௌன அஞ்சலி"

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இந்திய விடுதலை போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் , ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினமான (30.01.2024) இன்று மேயர் மு.அன்பழகன் தலைமையில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக "மௌன அஞ்சலி " அனுசரிப்பும் , அதனைத் தொடர்ந்து " தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி "எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் துணை மேயர் ஜி.திவ்யா, துணை ஆணையர் டி. நாராயணன், மாமன்ற உறுப்பினர் ஜெ.கலைச்செல்வி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இந்திய சுதந்திர போரட்டத்தின் போது தனது இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் விதமாக மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தை "தியாகிகள் தினம்" (Martyr's Day)-ஆக கடைபிடிக்க வேண்டியும், (30.01.2024)-ந் தேதி அரசு அலுவலங்களில் தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, தலைமையில் "தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி" எடுக்கப்பட்டது. இதில் காவல் துணை ஆணையர் தெற்கு, நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் என 70 நபர்கள் கலந்துக்கொண்டு, "இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் / குடிமகள் ஆகிய நாங்கள், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவோம் என்றும், தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டோம் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறோம் என்றும்,

அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வோம் என்றும், இந்திய அரசியலமைப்பின்பால் முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறோம் என்றும்” உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision