திருச்சி சிறப்பு முகாமில் திடீர் சோதனை - 4 செல்போன், 1 லேப்டாப் பறிமுதல்

திருச்சி சிறப்பு முகாமில் திடீர் சோதனை - 4 செல்போன், 1 லேப்டாப் பறிமுதல்

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போலி பாஸ்போர்ட், சட்ட விரோதமாக குடியேற்றம் என பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய இலங்கைத் தமிழர்கள் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் உள்ளிட்ட வெளிநாட்டைச் சேர்ந்த 1OO-க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா தலைமையில், திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் துணை ஆணையர்கள் சுரேஷ்குமார் மற்றும் ஸ்ரீதேவி தலைமையில் 70 போலீசார் கொண்ட குழுவினர் இரண்டு மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசாரின் சோதனையில் சட்ட விரோதமாக இந்தியாவில் நுழைந்ததாக சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்தவர்கள் வைத்திருந்த நான்கு செல்போன்கள், ஒரு லேப்டாப், மோடம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனையின் போது காவல்துறையினருக்கும், சிறப்பு முகாமில் உள்ளவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn