41 டிகிரி கொளுத்தும் வெயிலால் கொதிக்கும் திருச்சி மக்கள்

41 டிகிரி கொளுத்தும் வெயிலால் கொதிக்கும் திருச்சி மக்கள்

கோடைக்காலமும் தொடங்கவில்லை, அக்னி நட்சத்திரம் இன்னும் வரவில்லை ஆனால் வெயிலின் தாக்கம் 41 டிகிரி செல்சியஸ் தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. இப்படியே புவி வெப்பமயமாதல் அதிகமானால் மக்களின் நிலைமை பாலைவனத்தை விட அதிக அளவு வெப்பநிலை ஏற்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 7 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களில் 41 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையைத்  தாண்டியுள்ளது. கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 7 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்துள்ளது.

பொதுவாக கோடை காலம் தொடங்கி பின்பே 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உச்சத்தை அடையும் ஆனால் இன்னும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே இப்படிப்பட்ட நிலையால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் .
இந்த வெப்பநிலை அட்டவணையில் வேலூர் மாவட்டம் 41.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுமடன்  முதலிடத்திலும், திருத்தணி மற்றும் திருச்சி 41 டிகிரி செல்சியஸ் கரூரில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடமேற்கு திசையில் காற்று வீசுவதால் அதுவும் வறண்ட காற்றாக வீசுவதால் சூரியனிலிருந்து பூமியை வந்தடையும் வெப்பநிலை இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் சாலையோரங்களில் குளிர்பான கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களை பொதுமக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

எப்படி இருப்பினும் விவசாயிகளை பொருத்த வரை கோடைக்காலமோ மழைக்காலமோ எல்லாம்  சவாலாக தான் இருக்கிறது. மே மாதத்தின் பாதியில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் அப்பொழுது தான் சவாலான ஒரு நெருக்கடியை விவசாயிகள் சந்திக்க நேரிடும். ஆனால் அதற்கு முன்பே மார்ச் மாதத்திலேயே இப்படி இருக்கும் வெப்ப நிலையை தாங்கி கொள்ள முடியவில்லை பயிரிடப்பட்டு சந்தைகளுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் வாழைப்பழங்கள் வெப்பத்தால் வீணாகின்றன என்று விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் இது குறித்து கூறுகையில்... வெப்பநிலை அதிகரிப்பு நம்மால் கட்டுப்படுத்த இயலுமா என்று தெரியவில்லை. ஆனால் அதிலிருந்து பயிர்களையும், விளைப்பொருட்களையும்  பாதுகாக்க அதன் மீது தார்பாய்  போன்று ஏதேனும் கொண்டு மூட வேண்டும் அல்லது  ஈரப்பதம் இருக்க நீரைத்தெளித்திடல் வேண்டும் என்று கூறுகின்றனர்.

பொதுமக்களுக்கு  மருத்துவர்கள் கூறும் அறிவுரை, தேவை இல்லாமல் மதிய வேளைகளில் மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் அது மட்டுமின்றி நீர்ச் சத்துள்ள உணவுகளையும் பழங்களையும் அதிகமாக உண்ண வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81