ரூ.4 இலட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

ரூ.4 இலட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில், திருச்சி மாநகரில் இளைஞர்கள், பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்.

கடந்த (03.07.2024)-ந் தேதி அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட SIT சந்திப்பின் அருகே இரவு ரோந்து காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்கள் வாகன சோதனை செய்த கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் சுமார் 27 மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களான ஹான்ஸ் 150 கிலோ, விமல் 90 கிலோ ஆக மொத்தம் 240 கிலோ (மதிப்பு ரூ.4,00,000/-) குட்கா புகையிலை பொருள்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

உடனடியாக மேற்படி குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குட்கா புகையிலை பொருள்களை கடத்தி வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீநாத் (39), த.பெ.பழனிவேல் மற்றும் ஒரு நபரை கைது செய்தும், அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், மேற்படி நபர்கள் மீது Cr.No.521/2024 u/s 275,123 BNS r/w 24(i) COTPA Act - வழக்குப்பதிவு செய்யப்பட்டு எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

மேலும் எதிரி ஸ்ரீநாத் என்பவரின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரில் போதை பொருட்களான கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருள்களை கடத்தி விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision