திருச்சி மாநகராட்சி பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான கல்வி சீர் வழங்கிய பெற்றோர்கள்

திருச்சி மாநகராட்சி பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான கல்வி சீர் வழங்கிய பெற்றோர்கள்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட எடமலைப்பட்டி புதூரில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஆண்டுதோறும் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாணவர்கள் கல்வி கற்க தேவையான பொருட்களை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும், தன்னார்வலர்களும் வழங்குவார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்ததால் கல்வி சீர் வழங்கும் நிகழ்வு நடைபெறவில்லை. இந்நிலையில் இரண்டாண்டுகளுக்கு பின் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் இன்று நடைபெற்றது. சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பீரோ, நாற்காலிகள், எழுதுப்பொருட்கள், புத்தகங்கள், மின் விசிறிகள் உள்ளிட்ட பொருட்கள் மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் தமிழ் செல்வன் முன்னிலையில் கல்வி சீராக பள்ளிக்கு வழங்கப்பட்டது.

இதே நிகழ்சியில் எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி தொடக்க பள்ளியில் புதிதாக சேர்ந்த 120 மாணவர்களை கெளரவிக்கும் வகையில் அந்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டு பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பலதா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO