திருச்சி மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் 100% கோவிட் தடுப்பூசி நிறைவு

திருச்சி மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் 100% கோவிட் தடுப்பூசி நிறைவு

கோவிட் பெருந்தொற்றிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தமிழக அரசு தடுப்பூசி ஒன்றே தீர்வு என அதனை விரைவாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 22 லட்சத்து 82 ஆயிரத்து 559 கோவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
அதில் தற்போது 12 லட்சத்து 98 ஆயிரத்து 671 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். முதல் தவணை தடுப்பூசி 10 லட்சத்து 16 ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஆறு பேரும் இரண்டாவது தவணை தடுப்பூசி 2 லட்சத்து 81 ஆயிரத்து 705 பெறும் கோவிட் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலுள்ள இரண்டு கிராமங்களில் 100% கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்தார். திருவெள்ளரை கிராமத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 50 பேர் வசிக்கின்றனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 4075 இதில் 3980 பேர் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இதேபோல் நடராஜபுரம் கிராமத்தில் ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர்அதில் 1024 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதில் 946 பேர் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் 14 ஒன்றியங்களில் 95 சதவீதத்திற்க்கு மேல்   கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn