திருச்சியில் கரும்பு லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் 15டன் கரும்பு சாலையில் சரிந்து போக்குவரத்து பாதிப்பு.

திருச்சியில் கரும்பு லாரி  கட்டுப்பாட்டை இழந்ததால்  15டன் கரும்பு சாலையில் சரிந்து போக்குவரத்து பாதிப்பு.

நகர்புற சாலைகளில் விதிமுறைகளை மீறி அதிகபாரம் ஏற்றிச்செல்வதும், அதிக கொள்ளளவுள்ள பொருட்களை கொண்டுசெல்வதும் அதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாகிறது. போக்குவரத்து காவலர்கள் தங்களது பணியினை சரிவர செய்யாததால் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் இதர வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிக்குள்ளாவதும் தொடர் கதையாகி வருகிறது.

https://youtu.be/lyn6IF24B2Y

இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள அய்யாவயல் பகுதியிலிருந்து ஆலகரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லால்குடி காட்டூர் கரும்பு சர்க்கரை ஆலைக்கு கனரக லாரி சென்றுக்கொண்டிருந்தது. இன்றிரவு 6.50 மணியளவில் லாரி திருச்சி டிவிஎஸ்டோல்கேட் பகுதியில் வந்துக்கொண்டிருந்தபோது லாரியில் அதிகளவு கரும்பு லோடு ஏற்றப்பட்டிருந்ததால் பாலத்தின் வளைவில் லாரியை வளைக்க முடியாமல் லாரி டிரைவர் ரமேஷ் சிரமப்பட்டநிலையில் எதிர்பாராதவிதமாக பாரம் தாங்காமல் கரும்பு ஏற்றிவந்த லாரியின் டிப்பர் உடைந்து சாலையில் கரும்புகள் கொட்டியது.

அதிக போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் பணிமுடிந்து, கல்லூரி முடிந்து வீடு செல்வோரின் கார், இருசக்கரவாகனங்களின் வரிசைக்கட்டி நின்றதால் அரைமணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இதனையடுத்து ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு கரும்புகளை அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து சீரானது. சுமார் 15டன் எடையுள்ள கரும்புகளை ஏற்றிவந்ததாலே இந்த விபத்து ஏற்பட்டது என தெரியவந்ததுடன், லாரி ஓட்டுனர்மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். அதிக கொள்ளளவு மற்றும் அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகளை போலீசார் கண்காணித்து நெடுஞ்சாலை பகுதிகளிலேயே நிறுத்தி அபராதம் விதித்து அந்த லாரிகளை இயக்க தடைவிதித்தால் இதுபோன்ற நிகழ்வுகள் மற்றும் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn