ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பொதுமக்களை தடுத்த காவல்துறை -வாக்குவாதம் பரபரப்பு
ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் நேற்று வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு கூட்டமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுகவினர் கூட்டமாக ஒருபுறமும் ,பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வெடிவெடுத்து கூட்டமாகவும் ,விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆட்டம் பாட்டம் ஆரவாரத்துடன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி சிவராசு நேரடியாக ஆய்வு செய்து அதிகாரிகளுக்கும் காவல் துறையினருக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திற்க்கு எதிராக அரசு மருத்துவமனை உள்ளது . காவல்துறையினர் ஒருவரும் உள்ளே செல்லக்கூடாது என்ற 200 மீட்டருக்கு முன்னால் தடுப்பு வேலிகளை அமைத்து அனைவரையும் தடுத்து நிறுத்தி வந்தனர். அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் இதனால் பாதிக்கப்பட்டனர். பொதுமக்களும் அவருடைய வீடுகளுக்கு உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் நோயாளிகள் காவல்துறையினரிடம் முறையிட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் காவல்துறையும் பொதுமக்களும் காரசாரமாக பேசிக் கொண்டனர். பொதுமக்கள் எங்களை உள்ளே விடுமாறும் நோயாளிகளை வெளி நோயாளிகள் பிரிவிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து குரல் எழுப்பினர். வேட்புமனுத் தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வருபவர்களை தடுத்து நிறுத்தாமல் பொதுமக்களையும் நோயாளிகளையும் தடுத்து நிறுத்துவது நியாமான என்று ஸ்ரீரங்கம் வாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn