திருச்சி மாநகராட்சியில் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் தீவிரமாக கண்காணிப்பு - மாநகராட்சி தேர்தல் அதிகாரி பேட்டி

திருச்சி மாநகராட்சியில் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் தீவிரமாக கண்காணிப்பு - மாநகராட்சி தேர்தல் அதிகாரி பேட்டி

திருச்சி மாநகராட்சி தேர்தலில் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ- அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்டங்களில் வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால் 4 கோட்ட அலுவலகங்களிலும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஏராளமானோர் தங்கள் ஆதரவாளர்களுடன் திரண்டனர். இந்த நிலையில் இன்று மனுத்தாக்கல் நடைபெறும் 4 கோட்ட அலுவலங்களிலும் மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

 கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் ஆய்வு செய்துவிட்டு வெளியே வந்த மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் 8 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பு மனுவை பெறுகின்றனர். இன்று மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. 5 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யும் வளாகத்திற்குள் வேட்பாளர்கள் வந்துவிட்டால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்படும். வேட்பு மனுக்கள் நாளை (சனிக்கிழமை) பரிசீலனை செய்யப்படுகிறது. 7-ம் தேதி வேட்புமனு வாபஸ் பெறுபவர்கள் பெறலாம்.

வேட்புமனு தாக்கல் செய்யும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் கூடுதல் எண்ணிக்கையில் ஆட்கள்  சென்றதாக புகார் வந்தது. தற்போது வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளிலும் தேர்தல் விதியை மீறியதாக இதுவரை வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. 7-ம் தேதிக்கு பிறகு அரசியல் கட்சிகளின் பிரசாரம் வேகமாக இருக்கும். அதன்பின்பு கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும். வார்டு எண்: 28-ல் அதிகபட்சமாக 14 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn