725 மதுப்பாட்டில்களை திருடிய 5 பேர் கைது - 1 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல்

725 மதுப்பாட்டில்களை திருடிய 5 பேர் கைது - 1 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல்

கடந்த 22.01.2022-ஆம் தேதி மதுராந்தகத்திலிருந்து சிவகங்கைக்கு அரசு டாஸ்மார்க் பாட்டில் லோடு ஏற்றி சென்ற லாரி திருச்சி டோல்பிளாசாவில் நிற்க்கும் சமயத்தில் பார்த்த போது யாரோ லாரியின் தார் பாயை கிழித்து 36 பெட்டி அடங்கிய 725 மதுப்பாட்டில் திருடப்பட்டது தெரியவந்தது. உடனடியாக லாரியின் ஓட்டுநர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் (36) என்பவர் சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுசம்மந்தமாக சமயபுரம் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், காவல்துறை தலைவர், மத்திய மண்டலம் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சுஜீத்குமார் மேற்பார்வையில், இரண்டு தனிப்படைகள், காவல் துணை கண்காணிப்பாளர், மாவட்ட குற்றப்பிரிவு, நமச்சிவாயம் தலைமையில் அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படைகள் 23.01.2022-ம் தேதி முதல் திருச்சியிலிருந்து சென்னை வரை உள்ள அனைத்து சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வந்தனர்.

இந்நிலையில் 03.02.2022-ம் தேதி கிடைத்த ரகசிய தகவலின்படி சிறுகனூர் சணமங்களம் பிரிவு ரோடு, திருச்சி தேசிய 
நெடுஞ்சாலை அருகே சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபர்களான 1) கோடீஸ்வரன், கும்மிடிப்பூண்டி, 2) பழனிசாமி, கீரனூர், 3) தங்கபாண்டி, 4) தினேஷ் மற்றும் 5) கிரி சென்னை 
ஆகியோர்களை விசாரணை செய்ததில் அவர்கள் மேற்படி அரசு டாஸ்மார்க் பாட்டில் லோடு லாரி நெடுஞ்சாலையில் வரும் போது தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி லோடு லாரியின் முன்பக்கம் ஒரு வாகனமும், பின்புறம் ஒரு வாகனமும் சென்று லோடு லாரியின் மீது ஏறி தார்பாயை கிழித்து 
மதுபாட்டில் பெட்டிகளை திருடியதாக ஒப்புக் கொண்டனர். மேற்படி நபர்களை கைது செய்து அவர்கள் திருடிச் சென்ற மதுபாட்டிகளை விற்ற பணம் ரூ 1,40,000/-மும் மீதமுள்ள 103-பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.

மேற்படி குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க விரைவாக செயல்பட்ட தனிப்படையினரை 
காவல்துறை தலைவர், மத்திய மண்டலம் பாலகிருஷ்ணன், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் ஆகியோரை வெகுவாக 
பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn