தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சிறப்பு பேருந்துகள் இயக்கம் :

தை அமாவாசை மற்றும் வார விடுமுறை நாட்கள் என தொடர் நாட்கள், பயணிகள் தேவைக்கு ஏற்ப (09.01.2024) (வெள்ளிக்கிழமை) முதல் (11.02.2024) (ஞாயிற்றுக்கிழமை) வரை பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பேருந்துகள் வருவதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட், கும்பகோணம், கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(09.012024) (வெள்ளிக்கிழமை) அன்று தை அமாவாசை, முன்னிட்டு இராமேஸ்வரம் தேவிப்பட்டினம், சேதுக்கரை, வேதியரேந்தல், கோடியக்கரை. பூம்புகார். திருவையாறு, கும்பகோணம் (மகாமக குளம்), வேதாரண்யம், மானமதுரை மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்) ஆகிய ஊர்களுக்கு (08.02.2024) (வியாழக்கிழமை) முதல் (11.02.2024) (ஞாயிற்றுக்கிழமை) வரை கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, கரூர், திருச்சி. அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து இயக்கப்பட உள்ளது.

(10.02.2024) முதல் (11.02.2024) (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) வரை வார விடுமுறை நாட்கள் என தொடர்ந்து பொதுமக்கள் பயணம் அதிக அளவில் பேருந்துகளில் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதனை முன்னிட்டு 3 நாட்கள் பயணிகள் தேவைக்கு ஏற்ப (08.02.2024) (வியாழக்கிழமை) முதல் (09.022024) (வெள்ளிக்கிழமை) வரை பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி. மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்பட உள்ளது. மேலும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் தேவைக்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல (11.02.2024), (12.02.2024) ஆகிய நாட்களில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், சிவகங்கை, காரைக்குடி, இராமநாதபுரம், ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு இரவு 9:30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும், பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர். மேலும், மேற்குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் பயணிகள் வசதிக்காக ஒலிபெருக்கி மூலம் பேருந்து இயக்கம் குறித்து தொடர்ந்து ஒலிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே, பயணிகள் www.inste.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்த்து எவ்வித சிரமம் இன்றி பயணிக்க மொபைல் ஆப் TNSTC (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும், முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள் பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி, இப்பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ள வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision