தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி)யின் 58-வது நிறுவன தின விழா

தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி)யின் 58-வது நிறுவன தின விழா

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் என்ஐடி தனது 58-வது நிறுவன தின விழா நிகழ்ச்சியில் இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் கோவிந்தன் ரங்கராஜன் பிரதம விருந்தினராக பங்கேற்றார். 2020 - 21 கல்வியாண்டில் மாணவர் மன்றத்தின் தலைவர் கமலக்கண்ணன் அனைவரையும் ஆன்லைன் வழியாக வரவேற்றார். இதனை எடுத்து கல்வியின் டின் ராமகல்யாண் அய்யாகரி நிறுவனத்தின் அனைத்து துறைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சாதனை பற்றி விளக்கினார் பிரதமரின் ஆராய்ச்சி நிதி உதவியை பெற்ற 13 ஆராய்ச்சி மாணவர்களை பாராட்டி கடந்த ஆண்டில் நிறுவனத்தின் காப்புரிமை பதிவுகள் அதிகரித்திருக்கிறது என்றார். தொடர்ந்து நிறுவனத்தின் துறைகள் பெற்ற 8.5 கோடி மதிப்பிற்கு மேலான பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் பற்றின விவரங்களை தெரிவித்தார் கருவி மற்றும் கட்டுப்பாடு பொறியியல் துறையின் மாணவர்கள் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியை வென்றனர் என்பதை கூறி நிறுவனத்தின் பல்வேறு கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்ப விழாவில் பங்கேற்ற பிரபலங்களை பற்றி குறிப்பிட்டார். மேலும் நிறுவனத்தின் பசுமையை மேம்படுத்த மியாவாக்கி காடு வளர்க்கப்படுகிறது என்றார். 

இதனையடுத்து என்னை டி இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் உரையாற்றினார் ஆசிரியர்கள் மாணவர்கள் பணியாளர்கள் உட்பட நிறுவன சமுதாயத்தை கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகளை மீறி டிஜிட்டல் வாயிலாக கற்றல் கற்பித்தலை மாற்றியமைத்து பாராட்டினார். தேசிய கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து ஆண்டுதோறும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிடும் என் ஆர் எஃப் என்கின்ற பட்டியலில் தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி பொறியியலில் 9வது இடத்தையும், மொத்த பட்டியலில் 24 இடத்தையும் பெற்றுள்ளது. இதற்காக நிறுவனத்தின் என்.ஐ.ஆர்எஃப் குழுவிற்கும் தகவல் உறவு குழுவிற்கும் நன்றி தெரிவித்தார் எங்கள் ஐந்து வருட வழிகாட்டி திட்டத்தின் பலன்களைப் பெற்று வருகிறோம். இவைகளை ஆராய்ச்சிப் படிப்புகள் புதிதாக அறிமுகப்படுத்திய பாடங்கள் புதிதாக மையங்கள் தொடங்குதல் தொழில் நிறுவனங்களுடன் உறவுகள் போன்ற செயல்களால் காணலாம் என்று கூறினார் இந்த வழிகாட்டி திட்டத்தில் புதிய கல்வித் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்றார் இதனை எடுத்து 2020 - 21 கல்வியாண்டில் பல முக்கிய நிகழ்வுகளைப் பற்றி விளக்கினார் 19 கோடி மதிப்புள்ள அதிவேக கணினி வசதி, பல கோடி மதிப்புள்ள புலமை மையங்கள், பல்வேறு ஆராய்ச்சி நிதிகள் பெறுதல் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பயிற்சி முகாம்கள் நடத்துதல் போன்ற செயல்களை பற்றி குறிப்பிட்ட நிறுவனத்தின் வரலாற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பாரம்பரிய மையங்கள் அமைக்கப்படும் என்றார். நிறுவனத்தை பசுமை வளமாக மாற்ற எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் கொரோனா இரண்டாவது அலையின் போது வளாகத்தில் 500 படுக்கை தனிமை வசதி அமைத்ததை முன்வைத்துப் பேசினார் இந்த காலங்களில் நிர்வாக பாதுகாவலர்கள் தொடர்ந்து உதவி அளித்ததற்கு நன்றி தெரிவித்தார்

இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குனரான பேராசிரியர் கோவிந்தன் ரங்கராஜன் விருந்தினர் ஆன்லைன் வழியாக உரையாற்றினார் நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் காலங்களில் பல சவால்களை மேற்கொண்ட இதனால் அவர்களுக்கு பலருக்கு மனதளவில் வேதனைக் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார் இந்த வேதனையை போக்குவதற்காக ஊரடங்கு மாணவர்கள் வீட்டில் தன் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்க கிடைத்த ஒரு வாய்ப்பாக பார்க்கவேண்டும் கொரோனா பெருந்தொற்று மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் உலக அளவில் சுகாதார மேம்பாட்டுக்காக தீர்வுகளை கண்டுபிடிக்க ஒரு பெரிய வாய்ப்பு என்று கூறினார் குறிப்பாக உலகில் சராசரியாக 600 கோடி மக்களுக்கு மிகுந்த சுகாதார சேவைகள் பெற தேவையான நிதியும் இல்லை தவிர நிதி இருந்தாலும் பல இடங்களில் வசதியில்லை என்று தெரிவித்தார். இந்த சவால்களுக்கு தீர்ப்பை தேடி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

ஆளுநர்கள் மன்றத் தலைவர் பாஸ்கர் ஆன்லைன் வழியாக கூறுகையில் கடினமான சூழ்நிலையிலும் என்ஐஇடி நிறுவனம் உச்சத்தில் பறந்ததாக கூறினார் அதிவேக கணினி வசதி அமைப்பது நிறுவனத்தின் உயர் தரத்தை காட்டுகிறது புதிய கல்வித் திட்டத்தில் கூறிய இலக்குகளை நிறுவனம் கண்டிப்பாக அடையும் என நம்பிக்கை தெரிவித்தார். விருது வழங்கும் விழாவில் பல்வேறு துறைகளில் அதிக மதிப்பெண் பெற்ற முறையில் பல இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் விருது பெற்றனர் இறுதி ஆண்டு படிப்பை முடித்த சிறந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உள்பட 29 விருதுகள் வழங்கப்பட்டன.

கூடுதலாக 30 தலைப்புகளில் மாணவ-மாணவிகள் நற்கொடைகள் பெற்றன. பல ஆசிரியர்களும் அவர்களின் ஆராய்ச்சி கற்பித்தல் மற்றும் நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக அளித்த செயல்பாடுகளுக்கு அங்கீகாரமாக சிறந்த ஆசிரியர் விருது பெற்றனர் உலக புவியியல் துறை இயற்பியல் துறையில் சிறந்த துறை விருதினை பெற்ற பிறகு 2020 - 21 மாணவர் மன்றத்தின் துணைத் தலைவராக பாத்திமா மாஹா நடப்பு 2021 - 22 கல்வியாண்டில் புதிய மாணவ மன்றத்தை அறிமுகப்படுத்திய பின் நன்றி உரையாற்றினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn