சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் 15 மாணவர்கள் முதலிடம்

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் 15 மாணவர்கள் முதலிடம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 2021-22 ஆம் ஆண்டிற்கான பொறியியல் மற்றும் சட்டப்படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதி இரவு 9.00 மணியளவில் வெளியிட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்ற 15 மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

முதல் பிரிவில் (50 விழுக்காடு இடங்களுக்கான ஒதுக்கீடு EE (Main) மற்றும் +2 மதிப்பெண் அடிப்படையில்) பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் பெங்களுரை சேர்ந்த ஆர். ஸ்ரேயா தேசிய அளவில் 99.0109 விழுக்காடு பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இரண்டாம் பிரிவில் (50 விழுக்காடு இடங்கள் +2 மதிப்பெண் அடிப்படையில்) 15 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். சென்னை, அடையாறு, ஸ்ரீ சங்கரா சீனியர் மேல்நிலைப்பள்ளி -ஐ சேர்ந்த காவ்யா கிருஷ்ணன் சட்ட படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் 98.6 விழுக்காடு பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

விண்ணப்பங்கள் 2021 ஆகஸ்டு 14ம் தேதி மாலை 5.00 மணி வரை பெறப்பட்டு,  இரவு 9.00 மணிக்கு தர வரிசைப் பட்டியல் (rank List) வெளியிடப்பட்டது. எந்த நுழைவுத் தேர்வையும் நடத்தாமல் EE Main மற்றும் +2 மதிப்பெண்களை இணைத்து அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகிறது சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம். இவ்வாறு சேர்க்கை நடத்தும் ஒரே நிகர்நிலை பல்கலைக்கழகம் சாஸ்த்ரா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சட்டப்படிப்பிற்கு CAT மற்றும் +2 மதிப்பெண்களை இணைத்து அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது.

தரவரிசைப்பட்டியல் மற்றும் இணையவழி மூலம் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டிய விபரங்கள் மாணவர்களுக்கு www.sastra.edu என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை வெளிப்படையான முறையில் இணையவழி மூலம் ஆகஸ்டு 15, 2021 முதல் நடைபெறும். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ரா, டெல்லி, குஜராத், உத்திரபிரதேசம், கோவா, பீகார், ராஜஸ்தான், அஸ்ஸாம், ஜார்கண்ட் முதலிய மாநிலங்களிலிருந்து 35,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஜம்மு & காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் ஆகிய மாநில மாணவர்களுக்கு சேர்க்கையில் தனிச்சலுகை வழங்கப்படும். தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு 30 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn