திருச்சியில் வீடுகளில் 48 மணி நேரமாக  மழைநீர் வடியாமல் இருக்க காரணமான ஆக்கிரமிப்பு அகற்றம் -மாவட்ட நிர்வாகம் அதிரடி 

திருச்சியில் வீடுகளில் 48 மணி நேரமாக  மழைநீர் வடியாமல் இருக்க காரணமான ஆக்கிரமிப்பு அகற்றம் -மாவட்ட நிர்வாகம் அதிரடி 

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் திருச்சி குழுமணி சாலையில் உள்ள லிங்க நகர், செல்வநகர் ,அரவிந்த் நகர் ,அன்பு அவன்யூ மங்களம் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரண்டு நாட்களாக மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மாவட்ட ஆட்சியர் சிவராசு ஏற்கனவே தண்ணீர் வடியாமல் இருப்பதற்க்கு காரணம் வடிகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்பும் விவசாய நிலங்களில் தாழ்வான பகுதியில் பொதுமக்கள் வீடுகளை கட்டி குடியிருப்பது காரணம் என தெரிவித்தார் .

இந்நிலையில் ஆக்கிரமிப்புகள் மழைநீர் வடியாமல் இருக்க முக்கிய காரணம் என்பதால் திருச்சி குழுமணி சாலையில் உள்ள முக்கியமான பெரிய தனியார் கட்டிடத்தின் முன்பு வடிகால் வாய்க்காலை அடைத்து முன்பு தளம் போடபட்டுள்ளது.இதனை கண்டறிந்த  கோட்டாச்சியர்,மேற்கு வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஜேசிபி வாகனத்தை வைத்து ஆக்கிரமிப்பை அகற்றினர். 

முக்கியமாக அப்பகுதிகளில்  தேங்கியுள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்த பாதையை உடைத்து மழைநீர்  செல்ல வழி செய்தனர்.மேலும் அப்பகுதியில் 20 அடி வடிவாய்க்கால்  ஏற்கனவே இருந்தது. தற்போது 5 அடி அளவு கூட இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

 முக்கியமான வடிகால் வாய்க்கால் பகுதியில் வீடுகள் கட்டியிருப்பது தண்ணீர் ஓடும் பாதையிலேய இருப்பது நேரடியாக தெரிவதாகவும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.நேற்று 5ஆயிரம் கன அடி நீர் வரை சென்றது.இன்று 2ஆயிரத்து 500 கன அடி நீர் வருவதாக நீர்வள ஆதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision