சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் அலுவலர் K.கார்த்திகேயன் வழிகாட்டுதலுடன் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக சிறப்பு முகாம் 02.11.2021 முதல் 08.11.2021 வரை திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், நாகமங்கலம் ஊராட்சி, காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடங்கியது. இதில் 26 மாணவர்களும் 5 மாணவிகளும் கலந்து கொண்டனர். முகாமின் முதல் நாளன்ற பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு வீடுதோறும் சென்று மக்களின் வாழ்க்த்தர குறிப்பினை சேகரிந்தனர்.

அதனை அடிப்படையாகக் கொண்டு முகாமில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தனர். மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் திருச்சி, தில்லை நகரில் அமைந்துள்ள தி ஹார்மோன் கிளிவிக்" உட்சுரப்பியல் நிபுணர் Dr.S.சக்திவேல் இலவச பொது மருத்துவ முகாமின்" மூலம் மக்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கினார். இதன்மூலம் 65 பயனாளிகள் பயன்பெற்றனர். இம்முகாம் துவக்க விழாவில் சாரநாதன் பொறியியல் கல்லூரியின் திட்ட அலுவலர் K.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஸ்ரீரங்கம் கோட்டம் உதவி ஆணையர் A.அக்பர் அலி  சிறப்புரையாற்றினார்.

இரண்டாம் நாளான 03.11.2011 அன்று இலவச காது, மூக்கு, தொண்டை பரிசோதனை முகாமானது நடைபெற்றது. இதில் திருச்சி மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையைச் சார்ந்த Dr.T.அருள்ஈஸ்வரன் மக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டார். இதன் மூலம் 50 பயனாளிகள் பயன்பெற்றனர். "யோகா மற்றும் உடல் நலன்" எனும் தலைப்பில் விவேகானந்தா யோகா மையத்திலிருந்து ஸ்ரீதர்  மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆசனங்கள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை விளக்கினார்.

05.11.2021 அன்று புதுக்கோட்டை புத்தாஸ் வீரக்கலைகள் கழக நிறுவனர் செயலர் S.கார்த்திகேயன் ஆபத்து நேரங்களில் தங்களையும் மற்றவர்களையும் எப்படி தற்காத்துக்கொள்வது என்பது குறித்த "தற்காப்பு” விளக்கப் பயிற்சியளித்தார். “பேரிடர் மேலாண்மை" குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் T.பிரகாஷ் ராஜ்  பேரிடரை பற்றியும் பேரிடர் காலங்களின் பயன்படும் வகையில் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டிய பயிற்சிகளை பற்றியும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவிகள் பற்றியும் எடுத்துரைத்தார். 

ஐந்தாம் நாளான 06.11.2021 அன்று நலப்பணித்திட்ட மாணவர்கள் உயிர்த்துளி இரத்த வங்கிக்கு இரத்த தானம் 2/3 அப்பொழுது உயிர்த்துளி இரத்த வங்கியின் சார்பாக Dr.S.பிரபாகரன் கலந்து கொண்டு குருதி தானம் செய்வதன் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கினார். 
அதே வேளையில் காந்தி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பயன்படும் வகையில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் . K.கார்த்திகேயன் தலைமையில் கடப்பா கல்லினாலான அலமாரிகள் அமைத்துக் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்த கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் ஊர் மக்களுக்கு நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதன்பின் உயிர்த்துளி இரத்த வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் K.P.மோகன் "போஷான் அபியான்" எனும் தலைப்பில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். ஆறாம் நாளான 07.11.2021 அன்று கோவை கற்பகம் உயர்கல்வி கழைக்கழக இணை பேராசிரியர் முனைவர்.பா.சக்திவேல் “நாளெல்லாம் நலம் செய்வோம்" எனும் தலைப்பில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மக்களுக்கு செய்ய வேண்டிய நற்கடமைகள் பற்றியும், தேவை ஏற்படும்பொழுது அனைவரும் ஒன்றுதிரண்டு தருந்த உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். முகாம் நிறைவு விழாவில் சிறப்பு வருவாய் அலுவலர் ரவிக்குமார் கலந்துகொண்ட மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எவ்வாறு கையாள வேண்டும் தங்களை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கினார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision