டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி உண்ணாவிரதம் போராட்டம் - அமமுகவினர் கைது
பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையூறாய் இருக்கும் திருச்சி உறையூர் பகுதி, சீனிவாச நகரில் இயங்கி வரும் மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி, அமலுக்கு திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் உறையூர் பகுதி கழக செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப.செந்தில்நாதன் முன்னிலையில், நடைபெற்ற உண்ணாவிரதம் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
திருச்சி சீனிவாச நகர் சாலையில் இயங்கி வரும் மதுபான கடையை மூடக்கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் வண்ணை லதா, பகுதி செயலாளர்கள் கல்நாயக் சதீஷ்குமார், கமுருதீன், வேதாந்திரி நகர் பாலு, மதியழகன், கருப்பையா, உமாபதி, அணி செயலாளர்கள் பெஸ்ட் பாபு, தண்டபாணி,
தருண், சாந்தா, நாகூர் மீரான், நல்லம்மாள், அகிலாண்டேஸ்வரி, சாமி தொண்டைமான், கருணாநிதி, கைலாஷ் ராகவேந்தர், முகமது ஹாரிஸ், லோக்நாத் ஜான் வெங்கடேஷ், மனோஜ், கிஷோர், கல்நாயக் பிரேம், ஆறுமுகம், அனிதா, சுதா, தங்கமணி, மேரி,பரமேஸ்வரி, சீனி ஆனந்த், சக்தி முத்துராமலிங்கம், ஆண்ட்ரூஸ், குரு
ஸ்ரீதர், மோகன், சந்திரசேகர், கலைமணி பாபு, டிங்கர் ரமேஷ், மாரிமுத்து, சக்தி, பாரதி, மணிகண்டன், கோவிந்தன், மணி, வெங்கடேஷ், லோகு, ராஜமாணிக்கம், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கழக மாவட்ட, பகுதி, ஒன்றிய, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision