திருச்சி விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான புது டிராலிகளில் செடிகள் முளைத்து கிடக்கும் அவலம்

திருச்சி விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான புது டிராலிகளில் செடிகள் முளைத்து கிடக்கும் அவலம்

திருச்சி விமான நிலையத்திற்க்கு வாரத்தில் 11 நாடுகளிலிருந்து விமானங்கள் வருகிறது. மேலும் இங்கிருந்தும்  இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 16 மாதங்களாக கோவிட் தொற்று காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் இயக்கப்படவில்லை. மீட்பு அவசர தேவைக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் திருச்சியிலிருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா துபாய் ,மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது விமான பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

முக்கியமாக திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளை தாண்டியும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே உள்ளது. திருச்சியில் நாளொன்றுக்கு 4000 பயணிகளை தற்போது விமான நிலையம் கையாளுகிறது. இவர்கள் விமான நிலையத்தில் தங்களுடைய உடைமைகளை கொண்டு செல்வதற்கும் விமான நிலையத்திலிருந்து வெளியே வாகனங்களுக்கு உடமைகளை கொண்டு வருவதற்கும் டிராலிகள் பயன்படுத்தப்படுகிறது. கோவிட் தொற்று காலத்தில் அதிக அளவில் பயணிகள் விமானங்கள் இயக்கப்படவில்லை. அதனால் டிராலி வண்டி அதிக பயன்பாடு இல்லாமல் இருந்தது. இருந்தாலும் தற்போது பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

ஆனால் விமான நிலையத்தின் வருகை வாயிலில் அருகே நூற்றுக்கணக்கான டிராலிகள் ஓரமாக வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் செடிகள் படர்ந்து வளர்ந்து உள்ளன. பறவைகள் கூடுகளைக் கட்டும் அளவுக்கு அந்த டிராலிகள் தற்போது பயன்பாடுல்லாமல் கிடக்கிறது. பயணிகள் போக்குவரத்து அதிகரித்த நிலையில் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் இந்த டிராலிகளை உடனடியாக பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அங்கு வரும் பொதுமக்களும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான டிராலிகள் இன்னும் சில நாட்கள் அப்படியே இருந்தால் அவை அனைத்தும் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலைக்கு செல்லும் எனவும் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn