வீட்டின் முன்பு விறகு கட்டை - முதியவர் கொலை - 3 பேருக்கு தீர்ப்பு

வீட்டின் முன்பு விறகு கட்டை - முதியவர் கொலை - 3 பேருக்கு தீர்ப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா, மலையடிப்பட்டி அஞ்சல், ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால் (44). இவரது வீட்டிற்கு முன்பு புறம்போக்கு நிலத்தில் ஆரோக்கியசாமி (67) என்பவர் விறகு கட்டைகளை போட்டு வைத்துக் கொண்டு எடுக்க சொல்லியும், எடுக்காமல் வைத்திருந்தனர்.

இதனால் காவல்நிலையத்தில் (24.05.2020) ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்ற ஜெயபாலை, எங்கள் மேல் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுக்கும் அளவிற்கு நீங்கள் பெரிய ஆளா என்று கேட்டு கெட்ட வார்த்தையால் திட்டி பின்னர், ஆரோக்கியசாமி வீட்டில் இருந்து அருவாளை எடுத்து வந்து வீசி உள்ளார். அப்போது ஜெயபால் தலையை சாய்த்தும் வலது பக்க தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஜெயபால் இளைய மகன், ஏன் அடிக்கிறீர்கள் என்று எதிரி ஆரோக்கியசாமி என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது ரவி ரோமாஸ் சார்லஸ் (42), ரெஜினா மேரி (59), ஜான்சிராணி (39), யோனியா கனிமொழி (30), அனைவரும் சேர்ந்து பிரச்சனை செய்துள்ளார்கள். அப்போது ரெஜினா மேரி, ஜெயபால் தலையைப் பிடித்துக் கொண்டார் ஜான்சிராணி மற்றும், யோனியா கனிமொழி ஆகியோர் ஜெயபாலை கீழே தள்ளி கையும், காலையும் பிடித்துக் கொண்டார்கள்.

பின்னர் ஆரோக்கியசாமி மற்றும் ரவி ரோமாஸ் சார்லஸ் ஆகிய இருவரும் சேர்ந்து ஜெயபாலின் பிறப்புறுப்பில் கையாலும், காலாலும் உதைத்ததால் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து விட்டார். இறந்தவரின் அண்ணன் சம்பவ இடத்திற்குச் சென்று தனது அப்பாவையும், தம்பியையும் அழைத்துக் கொண்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ஜெயபால் இறந்துவிட்டார்.

பின்பு இறந்தவரின் அப்பாவான ஜேம்ஸ் வையம்பட்டி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜிடம் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கானது இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று சாட்சிகளை விசாரணை செய்ததில் இன்று (07.11.24) A1- எதிரி ஆரோக்கியசாமிக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் 6000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாத சிறைதண்டனையும், 

A2-எதிரி ரவி ரோமாஸ் சார்லஸ்-க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும்,அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாத சிறைதண்டனையும், A3- எதிரி ரெஜினா மேரிக்கு ஒரு வருட சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும், அபதாரம் கட்டத் தவறும் பட்சத்தில் 3 மாத சிறைதண்டனையும், 

A4, ஜான்சிராணி மற்றும் A5.யோனியா கனிமொழி ஆகிய இருவரும் விடுதலை செய்து இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணன் தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் வாதாடினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision