ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான 6 தேர்வு மையங்கள்

ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான 6 தேர்வு மையங்கள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள்) என்னும் தேர்வானது வரும் 09ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் 1840 தேர்வர்கள் கொள்குறி வகையிலான தேர்வினை முற்பகலில் எழுத உள்ளனர் மேலும் 800 தேர்வர்கள் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வினை 3 மையங்களில் பிற்பகலில் எழுத உள்ளனர். இத்தேர்வு பணிகளுக்கென 6 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் உள்ளிட்ட தேர்வு பொருட்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 2 இயங்கு குழுக்கள் (Mobile Unit)அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் ஆகியோர் இயங்குவர்.

ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வு மையத்தினை கண்காணித்திட அனைத்து 6 தேர்வு ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மையங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தேர்வர்கள் செல்லிடைப்பேசி, புளுடூத், டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதன பொருட்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துவர அனுமதி இல்லை என்றும்,

காலை தேர்வுக்கு காலை 09:00 மணிக்கு பின்னரும், மாலை தேர்வுக்கு மாலை 02:00 மணிக்கு பின்னர் தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்களை எந்த காரணத்தினை முன்னிட்டும் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision