13 ஆசிரியர்களுக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

13 ஆசிரியர்களுக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், ஆசிரியர்களுக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் இன்று (05.09.2021) நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை வழங்கினர்.

இவ்விழாவில், கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ந.கீதா, கொப்பம்பட்டி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இரா.அசோக்குமார், இடமலைப்பட்டிபுதுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் பி.ஜோ.கி.ஜெயராணி, பாம்பாட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்  இரா.மார்செலின் ரெஜினாமேரி, இ.வெள்ளனுர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.பாலசுப்ரமணியன்,

சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கோ.முத்தமிழ்செல்வன், மண்ணச்சநல்லுர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் க.அன்புசேகரன், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ப.சிவராஜ், உசிலம்பட்டி தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் கி.முத்துக்குமார், திருநெடுங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.எ.நித்யானந்தன்,

மேலகல்கண்டார் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.பீபிஅப்துல்,  கைலாசபுரம் பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் திரு.பொ.கணேஷ், வேங்கூர் செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சு.பகவதியப்பன் ஆகிய 13 பேருக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதினை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வில், திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் கே.எஸ்.எம்.கருணாநிதி, மாவட்டக் கல்வி அலுவலர்கள், கோ.பாரதி விவேகானந்தன், சி.செல்வி, கூ.சண்முகம், பெ.ஜெகநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn