"Mission Crusader'24" புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

"Mission Crusader'24" புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

SRM குழும நிறுவனங்களின் உறுப்பினர் கல்லூரியான ஈஸ்வரி பொறியியல் கல்லூரியின் Youth Red Cross சார்பாக அதன் முதன்மை நிகழ்வான "Mission Crusader'24" நடைபெற்றது. இது புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவதர்காக மொத்தம் 576 பங்கேற்பாளர்களுடன் நடத்தப்பட்ட சைக்கிள் பேரணியாகும்.  இந்நிகழ்ச்சியில் கயல்விழி ஐ.பி.எஸ்., தலைமை விருந்தினராக கலந்துகொண்டு "உடற்பயிற்சியின் முக்கியத்துவம்" பற்றி தனது எண்ணங்களை எடுத்துரைத்தார். மாணவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தி அவர் சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

SRM குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.ஆர்.சிவக்குமார், "புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்" குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.மாணவர்கள் உடல் நலனில் அக்கறை கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

"Misson Crusader" இன் இந்த முயற்சி கடந்த 8 ஆண்டுகளை தொடர்ந்து 9 வது ஆண்டாக மேற்கொள்ளப்பட்டது. சேகரிக்கப்பட்ட தொகை, குழந்தைப் புற்றுநோயாளிகளுக்கு உதவுவதற்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நலம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. இந்த புதிய முயற்சியில் குழுவினரின் கடின உழைப்பை நாங்கள் மனதார பாராட்டுகிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision