சங்கப்பெண்ணே மகளிர் தின விழா அழைப்பு
திருச்சி மாவட்ட வீடியோ & போட்டோ ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முதல் முயற்சி மாநில அளவில் புது முயற்சியாக சங்கப்பெண்ணே மகளிர் தின விழா கொண்டாட்டம். இந்த நிகழ்ச்சியில் உலக மகளிர் தினத்தில் புகைப்படக்கலை சங்கங்களில் பெண் உறுப்பினர்கள் அதிகம் பங்கு பெறவும், அதற்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு உணர்த்தும் ஒரு நிகழ்வு அமையும்.
இச்சங்கத்தில் தற்பொழுது உள்ள மகளிர் உறுப்பினர்களை கவுரவப்படுத்தி புது மகளிர் உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியாகும். வருகிற (08.03.2024) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள SRC கல்லூரி சாலை சுருதி ஹாலில் சங்கப்பெண்ணே மகளிர் தின விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும் எங்களது மாவட்ட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தொழில்நுட்ப ஆலோசகர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி, முன்னாள் நிர்வாகம் ஆலோசனை குழு நண்பர்கள் மற்றும் புகைப்பட சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி. எல்லா துறைகளிலும் சாதிக்கும் பெண்கள் இனி புகைப்பட சங்கப்பணிகளிலும் சாதனை படைக்க வரவேற்கிறோம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision