கொரோனா அபராதம் 2 முக்கால் லட்சம் போலீசார் அதிரடி நடவடிக்கை
கொரோனோ வைரஸ் நோய்தொற்று பரவுவலை முற்றிலும் கட்டுப்படுத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறையினர்
விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நேற்று 23.04.2021 திருச்சி மாநகரின் அனைத்து காவல் நிலையங்களிலும் 20க்கு மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும் முகக்கவசமின்றி சுற்றித் திரிந்த 1000 மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் தொகை சுமார் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரம் விதிக்கப்பட்டது.
தனிநபர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் செயல்பட்டவர்கள் மீது 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 34 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்ட வணிக வளாகங்கள் 3 மீது பதிவு செய்யப்பட்டு அபராதம் ரூபாய் 15 ஆயிரம் விதிக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் கொரோனோ நோய்த்தொற்றைக் குறைப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu