மத்திய மண்டல காவல் மாவட்டங்களில் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2414 நபர்கள் கைது, ரூ.10 கோடி சொத்துக்கள் மீட்பு

மத்திய மண்டல காவல் மாவட்டங்களில் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2414 நபர்கள் கைது, ரூ.10 கோடி சொத்துக்கள் மீட்பு

திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் மத்திய மண்டலத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பொருட்டு, ஆதாயகொலை, கொள்ளை, வழிப்பறி, கன்னக்களவு மற்றும் திருட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும், சமூக விரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு, திருச்சி மற்றும் தஞ்சாவூர் காவல் துறை துணை தலைவர்கள் மற்றும் மத்திய மண்டலத்துக்குட்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியும், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது சரித்திர பதிவேடுகள் தொடங்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.

மத்திய மண்டலத்தில் 2472 குற்றவழக்குகளில் ஈடுப்பட்ட மொத்தம் 2414 ஏதிரிகள் கைது செய்யப்பட்டு (திருச்சி-427, புதுக்கோட்டை-284, கரூர்-81, பெரம்பலூர்-122, அரியலூர்- 118, தஞ்சாவூர்-628, திருவாரூர்-319, நாகப்பட்டினம்-147, மற்றும் மயிலாடுதுறை-288) நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் மொத்தம் 47 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (திருச்சி-6, புதுக்கோட்டை-5, அரியலூர்-1, தஞ்சாவூர்-26, திருவாரூர்-9) ஆவர்.

மேலும் கைது செய்யப்பட்ட எதிரிகளிடமிருந்து களவாடப்பட்ட சொத்துக்களில் ரூ.10,19,97,314/- மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு (திருச்சி-ரூ.1,59,02,289/-, புதுக்கோட்டை-ரூ.2,77,56,130/-, கரூர்-ரூ.58,63,950/-, பெரம்பலூர்-ரூ.81,65,885/-, அரியலூர்- ரூ.56,16,555/- தஞ்சாவூர்-ரூ1,97,05,740/-, திருவாரூர்-ரூ.87,21,670/-, நாகப்பட்டினம்- ரூ.43,33,820/- மற்றும் மயிலாடுதுறை-59,31,275/-) நீதிமன்ற உத்தரவின் படி பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு காவல்துறையின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.

தொடர்ந்து ஆதாயகொலை, கொள்ளை, வழிப்பறி, கன்னக்களவு மற்றும் திருட்டு குற்றச்செயல்களில் ஈடுப்பட்ட 48 நபர்களை (திருச்சி-3, புதுக்கோட்டை-1, கரூர்-13, பெரம்பலூர்-5, அரியலூர்-16, தஞ்சாவூர்-2, திருவாரூர்-2, மற்றும் மயிலாடுதுறை-6) குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மண்டலத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் ஆதாரங்களை திரட்டியும், விசாரணையை விரைந்து முடித்தும் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சரியான முறையில் ஆஜர்படுத்தியும், ஆதாய கொலை 1 வழக்கிலும், 50 வழிப்பறி வழக்குகளிலும், 75 கன்னக்களவு வழக்குகளிலும், 13 செயின் பறிப்பு வழக்குகளிலும், 68 வாகன திருட்டு வழக்குகளிலும், 2 திருட்டு வழக்குகளிலும் ஆக மொத்தம் 209 குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்று தரப்பட்டுள்ளது.

மேலும் குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவவும், ரோந்து பணிகளை அதிகபடுத்தவும் வாகன தணிக்கைகள் நடத்தவும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision