நம்மாழ்வார் நினைவுநாள் - பனைவிதைகள் விதைப்பு
மறைந்த வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் நினைவு நாளான இன்று (30.12.2022) காலை 7.00 மணிக்குத் தண்ணீர் அமைப்பு மற்றும் குண்டூர் வடக்கு கிழக்கு கிராம குடியிருப்போர் நலச் சங்கம் இணைந்து, குண்டூர் பெரியகுளம் என்றழைக்கப்படுகின்ற குண்டூர் ஏரிக் கரையின் அய்யனார் கோவிலையொட்டிய வடக்குக் கரையில் 250க்கும் மேற்பட்ட பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் நீலமேகம், செயலாளர் பேராசிரியர் சதீஷ்குமார், வடக்கு கிழக்கு குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் பேராசிரியர் நெடுஞ்செழியன், பொருளாளர் நடராசன், ஜே.எம்.நகர் பிரபாகரன் மற்றும் சங்கத்தின் முன்னணி பொறுப்பாளர்கள், டேவிட், புகழேந்தி, வினோத், திருவளர்ச்சிப்பட்டி குமார், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கோ.நம்மாழ்வார் நினைவு நாளில் அவர் வாழ்த்துகாட்டிய இயற்கை வேளாண் வாழ்வியல் பாதையை கடைபிடிப்போம். இயற்கை விவசாயத்தின் ஒர் அடையாளமாக மாறியவர் நம்மாழ்வார். மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் மட்டுமே ஆரோக்கியமான சூழல் இங்கு நிலவும் என்று தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தியவர் .
நிலவளம் நீர் வளம், சூழலியல் நலம் பேணிட பனைவிதைப்பை தொடர் இயக்கமாக மாநிலம் முழுக்க கொண்டு செல்ல வேண்டும் என்று உறுதி மொழி ஏற்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO