சுங்க கட்டணத்திற்கு பணம் இல்லை - 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து
திருச்சியிலிருந்து தஞ்சை வரை செல்லும் கும்பகோணம் கோட்டத்திற்கு சொந்தமான அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது. துவாக்குடி சுங்கச்சாவடியினை அரசு பேருந்து கடக்க முயன்றபோது அரசு பேருந்திற்கான பாஸ்ட்டேக் அட்டை ரீசார்ஜ் செய்யப்படாமல் இருந்துள்ளது.
சுங்கச்சாவடிக்கான பாஸ்ட்டேக் கட்டணமில்லாததால் துவாக்குடி சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாமல் அரசு பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 25க்கும் மேற்பட்ட பயணிகள் இறக்கி விடப்பட்டு அவ்வழியாக வந்த மற்ற அரசு பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவு கிடைக்காததால் அரசு பேருந்தானது சுங்கச்சாவடி அருகிலேயே சுமார் 3 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் அரசு பேருந்து போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் வந்தபிறகு நடத்துனர் சுங்க கட்டணத்திற்காண பணத்தை செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. போக்குவரத்து துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இது போன்ற நிலை தொடர்ந்து ஏற்படுவதாக அரசு பேருந்து ஓட்டுனர்களும் நடத்துனர்களும் புலம்பி செல்கின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO