மாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருச்சியில் விஜய் ரசிகர்கள் சிறப்பு பூஜை!!

மாஸ்டர்  திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருச்சியில் விஜய் ரசிகர்கள் சிறப்பு பூஜை!!

நடிகர் விஜய் மற்றும் விஜயசேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதற்காக நடிகர் விஜயின் ரசிகர் உற்சாகமாகவும், கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

Advertisement

இதன் ஒருபகுதியாக திருச்சியில் இளைய தளபதி ஜோசப் விஜய் மக்கள் இயக்கத்தின் ஜங்சன் பகுதி நிர்வாகிகள் மாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையிலுள்ள ஒண்டிகருப்பணன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். 

Advertisement

அரசியலுக்கு நடிகர் விஜய் வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement