தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள NCC தேசிய மாணவர் படையின் தலைவர் திருச்சி வருகை

தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள NCC தேசிய மாணவர் படையின் தலைவர் திருச்சி வருகை

இந்திய கடற்படையின் மூத்த தளபதியும், தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள தேசிய மாணவர் படை (NCC) யின் தலைமை இயக்குனர், டெபுடி டைரக்டர் ஜெனரல் (DDG) கம்மடோர் மலே குக்ரெட்டி திருச்சிக்கு வருகை புரிந்தார்கள்.

திருச்சி சரக என்.சி.சி குரூப் கமாண்டர், கர்னல் சி. இளவரசன் அவர்களை வரவேற்று, திருச்சி பகுதியில் என்.சி்.சி. சார்பாக நடந்த பல நிகழ்வுகள் மற்றும் தற்போது கோவிட்-19 காரணமாக நடந்து கொண்டிருக்கும் ஆன்லைன் பயிற்சிகள், மற்றும் வரவிருக்கிற 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.

மேலும் அமைச்சர் கே.என்.நேரு அவர்களுடனான தமது சந்திப்பு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலமாக திருச்சியில் என்.சி.சி. பயிற்சி மற்றும் பயிலகக்கட்டிடம்  கட்டுவதற்கு போதிய காலியிடம் வேண்டியது தொடர்பான பணிகளை எடுத்துரைத்தார்கள். திருச்சி பகுதியில் இருந்த ஃபயரிங் ரேன்ஜ்கள் மூடப்பட்டதன் காரணமாக, திருச்சி பகுதி என்.சி.சி. கேடட்டுகள் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக மதுரை, மற்றும் தஞ்சாவூர் செல்ல வேண்டிய  நிலை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்கள். மேலும், தமிழக அரசு காரைக்குடியில் 3.49 ஏக்கர் நிலத்தை என்.சி.சி. அலுவலகம் மற்றும் பயிற்சியாளர்கள் வசிப்பிடம் கட்டுவதற்காக ஒதுக்கித் தந்துள்ளது என்பது குறித்தும் விளக்கினார்கள்.

கல்லூரி மாணவர்களின் பாடத்திட்டத்தில் ஒரு பாடப்பகுதியாக என்.சி.சி. பயிற்சியினை சேர்ப்பதற்கான ஆயத்தப் பணிகளின் முன்னேற்றம் பற்றியும், குறிப்பாக சுமார் 70 கல்லூரிகளில், பாரதிதாசன் பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக் கழகம், சாஸ்திரா, பெரியார் மணியம்மை பல்கலைகழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்பு கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் என்.சி.சி. பயிற்சியினை ஒரு பாடமாக சேர்ப்பது  குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்கள்.

இப்பணிகளை துரிதப்படுத்தக் கோரி, தமிழக அமைச்சர் பெருமக்களை, மேதகு DDG அவர்கள் நேரில் சந்தித்து பேசுமாறு வேண்டிக் கொண்டார்கள். பின்னர்  எளிமையாக நடத்தப்பட்ட ஒரு விழாவில், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவி கேடட் சாலினி அவர்களுக்கும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர் கேடட் மனோஜ் அவர்களுக்கும்
DDG அவர்கள், கமெண்டேசன் கார்டு மற்றும் மெடல்கள் வழங்கி, அவர்களின் சீரிய பணியைப் பாராட்டி சிறப்பித்தார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn