திருச்சி மத்திய சிறைச்சாலையில் சிறைப்பணியாளர்கள் நூலகம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறைப்பணியாளர்கள் குடியிருப்பிலுள்ள பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன் பெறும் வகையில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை, காவல்துறை இயக்குநர் / தலைமை இயக்குநர் அமேரேஸ் புஜாரி ஆனையின்படி, சிறைப்பணியாளர்கள் நூலகம் அமைக்கப்பட்டது.
இந்நூலகத்தை திருச்சி சரக சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை துணைத்தலைவர் தகூ.ஜெயபாரதி அவர்களால் இன்று (12.09.2023) குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொ) கிருஷ்ணகுமார் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நூலகத்தில் கதைகள், கவிதைகள், தமிழ் இலக்கியம், பொது அறிவு நூல்கள், துறைத்தேர்வுகளுக்கான புத்தகங்கள், தலைவர்களின் வாழ்க்கை வரவாறு இடம்பெற்றுள்ளன. நூல்கள் போன்ற ஆயிரக்கணக்கான நூல்கள் இப்புத்தகங்களை பணியாளர்கள் தங்களது ஓய்வு நேரங்களில் நூலகத்தில் அமர்ந்து அமைதியான முறையில் படித்திடவும்,
பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நூலக ஆசிரியரின் அனுமதி பெற்று தங்களுக்கு தேவையான புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அங்கு அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் படித்து பயன் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பணியாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்திலுள்ள சிறியோர் முதல் பெரியோர் வரை பல்வேறு நூல்களை படித்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision