வாள் வைத்து ரீல்ஸ் செய்த திருச்சி இளைஞருக்கு சிறை

வாள் வைத்து ரீல்ஸ் செய்த திருச்சி இளைஞருக்கு சிறை

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் துறையின் சமூக வலைதள கண்காணிப்பு குழுவில் கண்காணித்து போது சோமரசம்பேட்டை, எட்டரை கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் முகேஷ் ராஜ் (21) என்பவர் அவரது முகின் முகேஷ் (_mugin_mugesh) என்ற ID கொண்ட இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் கத்தி,  வாள் போன்ற அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துள்ளவாறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமான வசனங்களுடன் சமூக வலைதளத்தில் வெளிட்டு வந்துள்ளது தெரிய வந்தது.

இந்நிலையில், இன்று (15.12.2023) எட்டரை கடைவீதிக்கு காய்கறி வாங்க வந்த பெண் ஒருவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் Helpline எண்ணிற்கு தொடர்பு கொண்டு எட்டரை சிவன் கோவில் பகுதியில் அடையாளம் தெரிந்த நபர் ஒருவர் அருவாளுடன் நின்று கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருப்பதாக தகவல் கொடுத்ததின் பேரில், திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு அருவாளுடன் சுற்றி திரிந்த மேற்படி முகேஷ் ராஜ்-யை கைது செய்து சோமரசம்பேட்டை காவல் நிலைய குற்ற எண். 351/23, ச.பி. 294(b) 506(ii) இதச & 27(1) Arms Act ன்படி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேலும் இது போன்று அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடும் நபர்கள் அருவாள், கத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு பிறந்த நாள் மற்றும் பிற விழா காலங்களில் கேக்குள் வெட்டும் நபர்கள், வில்லன்கள் போன்ற தோனியில் பின் இசைகள் கொண்ட பாடல் மற்றும் வீடியோக்களை பதிவிடும் நபர்களின் விபரத்தினை உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் Helpline Number 94874 64651 க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவ்வாறு அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision