திருச்சியில் 4000 ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - பணிகள் பாதிப்பு

திருச்சியில் 4000 ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - பணிகள் பாதிப்பு

திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனையில் 27 ஒர்க் ஷாப்பில் அவுட்சோர்சிங் முறையை அமல்படுத்தும் ரயில்வே நிர்வாகத்தையும், மத்திய அரசையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட அறிவிப்பு ஆணை நேற்றைய தினம் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தனியார்மயத்திற்கு வித்திடும் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இன்றையதினம் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றும் எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் 4000பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் இன்று பணி புறக்கணிப்பு செய்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல கோடி இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு ள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision