விரிவாக்கப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன், எம்.பி ஆலோசனை

விரிவாக்கப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன், எம்.பி  ஆலோசனை

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் திருச்சி பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, விமான நிலைய இயக்குனர், மாவட்ட துணை ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர்,

தேசிய நெடுஞ்சாலைகள் துறை கோட்ட பொறியாளர், கிழக்கு பகுதி வட்டாட்சியர், கிராம புற நெடுஞ்சாலை உதவி இயக்குனர், துணை வட்டாட்சியர் (நிலம் கையகப்படுத்துதல்), விமான நிலைய வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

    

கடந்த 01ம் தேதி மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.என்.அருண் நேரு, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செ.ஜோதிமணி, முரசொலி ஆகியோருடன் நேரில் சந்தித்து திருச்சி விமான நிலைய சேவைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வைக்கப்பட்டது.

அதன்படி கூடுதல் விமான சேவைகள், அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதற்கு ஓடுதள பாதை விரிவாக்கம், இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் (BASA) படி திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை வழங்கிட சில மாற்றங்களை செய்ய வேண்டியது குறித்தும், திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை போன்ற செயல் திட்ட பணிகள் குறித்தும், தாம் முன்னெடுக்கும் பணிகளுக்கு அனைவரது பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்ட செயலாளர்கள் திருச்சி மாநகர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் பெல் ராஜமாணிக்கம், மாநில மகளிர் அணி துணை செயலாளர் சந்திரா ஜெகநாதன், மாவட்ட துணை செயலாளர் ராஜன் பன்னீர் செல்வம், அரியமங்கலம் வெ. அடைக்கலம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision