முதல்வரின் முகவரி திட்டத்தால் பயனடைந்த பள்ளி மாணவர்கள்
திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே உள்ளது திருப்பராய்த்துறை ஊராட்சி. இந்த ஊராட்சியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த பள்ளியில் சுமார் 2000 மாணவர்களுக்கு மேல் படித்து வருவதாகவும், இந்த பள்ளிக்கு திருச்சி மாவட்ட மட்டுமல்லாது, கரூர் மாவட்டத்திலிருந்தும் ஏராளமான மாணவ மாணவியர்கள் இந்த பள்ளிக்கு தினமும் அரசு பேருந்து பயணம் செய்து பள்ளிக்குச் செல்கின்றனர்.
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தி்ருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்த செல்வதற்குமிகவும் சிரம்ப்பட்டு வந்தனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களே சுழற்சி முறையில் அரசு பேருந்தில் ஏற்றி விடும் பணியை செய்து வந்தனர். இதனால் இந்த பகுதியில் உரிய பேருந்து நிலையம், சாலை பாதுகாப்பு கட்டமைப்பு இல்லாத நிலையில் இருப்பதால் முதல்வரின் முகவரி துறைக்கும், மாவட்ட கலெக்டர், எம்,எல்.ஏ, எம்.பி ஆகியோருக்கு பள்ளி நிர்வாகங்கள் சார்பிலும் மற்றும் முன்னால் விமானபடை அதிகாரி தங்கராஜ் அவர்களின் சார்பிலும் கோரிக்கை விடுத்தனர்.
மேற்கண்ட மனுக்களின் படி ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுந்தர் அறிவுரையின் படி பள்ளி விடும், தொடங்கும் நேரத்தில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 03/07/24 மாலை 3 ணி முதல் 6 மணி வரை கும்பகோனம் கோட்டத்தின் திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில், முசிறி பணிமனை மேலாளர் தண்டாயுதபாணி, குளித்தலை பணிமனை மேலாளர் ராஜேந்திரன், திருச்சி நகர துணை மேலாளர் சுரேஷ் பார்த்திபன், விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராணி, திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசமூர்த்தி ஆகியோர்ஆய்வு பணிகளில் கலந்து கொண்டனர்.
அப்போது பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இன்றுவரை பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குளித்தலை பணிமனை மேலாளர் ராஜேந்திரன் தலைமையில் பணியாளர்கள் இன்று வரை மாணவ மாணவியர்களை பேருந்துளில் வரிசை படியாக நின்று ஏற்றி விட்டும், பள்ளி விடும் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கியும் , அரசு அலுவலர்களின் கண்காணிப்பு பணிகளும், சாலை பாதுகாப்பு பணிகளும் தொடர்ந்து வருகிறது.
இதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 1990 ஆம் வருடம் பஸ்க்காக காத்திருந்தபோது தாறுமாறாக லாரி ஒன்று பள்ளி மாணவர்களின் கூட்டத்திற்கு புகுந்து பள்ளி மாணவர்கள் 14 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். அப்பொழுது இந்த சாலையானது மிகவும் குறுகலான சாலையாக இருந்தது. ஆனால் தற்பொழுது சாலை அகலப்படுத்தப்பட்டு போதிய சாலை பாதுகாப்பு கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தினால் இதுபோன்று விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்காக பள்ளி நிர்வாகங்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் முன்னால் விமான படை அதிகாரி தங்கராஜ் சார்பாக கோரிக்கை மனுவிடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை மனுவின் அடிப்படையில் கடந்த 34 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதே பள்ளி மாணவர்களின் நலனை கருத்துகொண்டு அரசு துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குளித்தலை பணிமனை மேலாளர் ராஜேந்திரன்கூறுகையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சிறப்பு வகுப்புகள் செல்லும் மாணவர்களுக்கு பேருந்து வசதி இல்லை குறைபாடு இருந்ததால் பேருந்து நேரத்தை மாற்றியமைத்து அவர்களுக்கு பயன்படும் வகையில் நேரத்தை மாற்றி உள்ளோம் என்றார்.
முன்னாள் விமானபடை அதிகாரி தங்கராஜ் பேசுகையில்..... பல ஆண்டுகளாக இந்த பள்ளி மாணவர்களுக்கு இந்த நிலை இருந்தது. மக்கள் முதல்வர் முகவரிக்கு மனு அளித்ததேன் உடனடியாக விரைந்து விசாரணை செய்தனர் இது போன்று சமூக அக்கறை கொண்ட பிரச்சினைகளை விண்ணப்பிக்கும் போது அதற்கான தீர்வுகளையும் அளித்து வருகின்றனர். மேற்ண்ட மாணவ மாணவியர்களின் சாலை பாதுகாப்பு விஷயங்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக முதல்வரின் முகவரி துறைக்கும் ,திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கும் சாலை பயனீட்டாளர் நலக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision