மூலிகைச் செடிகளை பயிர் செய்ய காத்திருக்கும் விவசாயிகள் - திருச்சியில் தொடரும் ஆய்வு!

மூலிகைச் செடிகளை பயிர் செய்ய காத்திருக்கும் விவசாயிகள் - திருச்சியில் தொடரும் ஆய்வு!

மருத்துவமனைகள், மருந்துகள் இல்லாத காலங்களில் மனிதனுக்கு ஏதாவது ஒரு நோய் ஏற்பட்டால் பெரிதும் உதவுவது மூலிகைகள் தான். அதனால்தான் என்னவோ மனிதன் அதிக ஆயுள் கொண்டு வாழ்ந்தான். இன்றளவும் ஹோமியோபதி மற்றும் மூலிகை மருத்துவங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

 Advertisement

வனத்தில் இருந்து மூலிகைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் அந்த மூலிகைகள் குறைவு ஏற்பட்டு பிற்காலத்தில் அச்செடி இல்லாத வகையில் மாறிவிடும். இதனை தடுப்பதற்காகவே தமிழக அரசு நவீன வனமர விதை மையம் ஏற்படுத்துவதற்கான அறிக்கையில் வெளியிடப்பட்டது.

அதன்படி திருச்சி எம்.ஆர் பாளையத்தில் கடந்த 2018ம் ஆண்டு சுமார் 2 கோடி மதிப்பில் தமிழக அரசு சார்பில் நவீன வனமர விதை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 1 ஹெக்டேர் பரப்பளவில் விதை மையம் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டின் மத்திய மற்றும் டெல்டா மாவட்டங்களில் உயர்தரமிக்க மர விதைகள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைப் விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது தான் இந்த வன விதை மையம். 

Advertisement

தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் சென்று உயர்தர மிக்க மர வகைகள் மற்றும் அழிந்து வரக்கூடிய மூலிகைகள் ஆகியவற்றின் விதைகளை சேகரித்து பதப்படுத்தி, சுத்தம் செய்து, அவற்றை ஆய்வு செய்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொடுப்பதே இம்மையத்தின் செயல்பாடாக இருக்கிறது.

கடந்த ஆறு மாத காலமாக மனிதனின் நோய் தீர்க்கும் முக்கியமான 12 மூலிகைகளை ஆய்வுக்கு உட்படுத்தி பராமரித்து வருகின்றனர். இதில் அமிர்தபலா, மகா வில்வம், மாகாளிக் கிழங்கு, நிலப்பனை கிழங்கு, ஆரோக்கிய பச்சிலை, பவளமல்லி, நாராயண சஞ்சீவி, செங்காந்தள், ஈஸ்வரமூலி, வசம்பு, பெருமூலி, சிறு அடைதொடை, சிறு ஆடாதொடை ஆகிய முக்கிய வன மூலிகைகள் சேகரிக்கப்பட்டு பயிர் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் 6 வகையான மூலிகைகள் ஆய்வில் வெற்றி பெற்றுள்ளன. தொடர்ந்து மற்ற மூலிகைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

வன மூலிகைகள் விரைவில் ஆய்வு முடித்தவுடன் விவசாயிகள் பயிர் செய்யும் வகையில் தொடர்ந்து ஆய்வுகளை இந்த நவீன வன மர மையத்தில் நடைபெற்று கொண்டே வருகிறது. இது மட்டுமல்லாமல் உயர்தர மிக்க மன மரங்களையும் இங்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.