டிஜிபியாக பதவி உயர்வு சிலை கடத்தல் பிரிவு டிஜிபியானார் சைலேஷ்குமார் யாதவ்!!

டிஜிபியாக பதவி உயர்வு சிலை கடத்தல் பிரிவு டிஜிபியானார் சைலேஷ்குமார் யாதவ்!!

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, கூடுதல் டிஜிபி சைலேஷ் குமார்யாதவ், டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, அதே பதவியில் நீடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு உள்துறை செயலர் அமுதா, பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது...

சிலை கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு, கூடுதல் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ், டிஜிபியாக பதவி உயர்த்தப்படுகிறார். அதே பதவியில் டிஜிபியாக அவர் பணியைத் தொடர்வார். அதற் காக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி பதவி, டிஜிபி அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

சைலேஷ்குமார் யாதவ் பதவி உயர்வின் மூலம் தமிழகத்தில் டிஜிபிக்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் அரசு ஒப்புதல் அளித்த பணியிடங்களான 23 கூடுதல் டிஜிபி பணிகளில் ஒரு பதவியும், ஐஜிக்கள் பணி களில் 41க்கு 9 பதவிகளும், எஸ்பி பணிகளில் 143க்கு ஒரு பதவியும், கூடுதல் எஸ்பி பணிகளில் 117க்கு 38 பணி யிடங்களும் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது.

கீழ்மட்ட அளவில், எஸ்ஐ பணியிடங்கள் ஆயிரத்து 520, போலீஸ் பணியிடங்கள் 10 ஆயிரத்து 506 என மொத்தம். 13 ஆயிரத்து 42 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. திருச்சியில் ஆணையராக சைலேஷ் குமார் யாதவ் பணியாற்றிய பொழுதுதான் திமுகவின் முதன்மைச்செயலாளரும், இந்நாள் உள்ளாட்சி அமைச்சருமான கே.என்.நேருவின் சசோதரர் கே.என்.ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இன்னும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் தற்பொழுது எஸ்.ஐ.டி விசாரணையில் உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.....

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision