திருச்சியில் பிரேக் பிடிக்காமல் ஏழு பேர் மீது ஏறி இறங்கிய டாரஸ் லாரி

திருச்சியில் பிரேக் பிடிக்காமல் ஏழு பேர் மீது ஏறி இறங்கிய டாரஸ் லாரி

தஞ்சை - திருவாரூர் பகுதியில் இருந்து பருத்தி மூட்டை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி சென்ற லாரி திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கடை விதி பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட இரும்பு தடுப்பை தட்டிக்கொண்டு வேகமாக சாலையில் வந்த லாரி 7 இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களை மீட்டு திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர சேர்ந்த முத்துக்குமார் (52) என்பவருக்கு தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொருவர் காட்டூர் பகுதியில் ஜிம் நடத்தி வரும் சுமன் (26) என்பவருக்கு முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்கு செய்த போக்குவரத்து பிரிவு போலீசார் லாரி கட்டுப்பாட்டை இழந்து வருவதை பார்த்ததும் அங்கிருந்து ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவத்தால் காட்டூர் கடை வீதியில் பொதுமக்கள் குவிய தொடங்கினர். இந்த நிலையில் அந்த லாரியை எடுத்தால் லாரி பிரேக் ஃபெயிலியர் ஆகி பின்னோக்கி செல்வதால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக டயர்களில் கட்டைகள் கொடுத்து நிறுத்தப்பட்டது.

லாரியை சரி செய்து அங்கிருந்து போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் காட்டூர் கடை வீதியில் இருசக்கர வாகனங்கள் சாலை ஓரத்தில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றது.

அதில் ஒரு அடுக்கு, இரண்டு அடுக்கு, மூன்று அடுக்கு என நிறுத்தப்படுவதால் இருசக்கர வாகனங்கள் சாலையின் நடுவரை நிறுத்தப்படுவதால் இது போன்ற விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கூறுகின்றனர். இதனால் இப்பகுதியில் இருசக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்குஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision